வி
டுதலைப்புலிகள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் அல்ல, கப்பலில் வரும் தமிழ் மக்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அனுப்பப்பட்டால் அங்கு அவர்கள் துன்புறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளன. எந்தவித குற்றங்களும் சுமத்தப்படாது ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் அமைப்பபை சேர்ந்தவர்களை அரசு தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது என அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தை தளமாக கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறீலங்காவுக்கான பிரதிநிதி ஜேம்ஸ் மக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்காவை நோக்கி வரும் அகதிகள் கப்பலை அமெரிக்கா அவதானிக்கின்றது என்ற தலைப்பில் த வொசிங்டன் போஸ்ட் கடந்த 4 ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது, அதற்கு பதில் தரும் முகமாக அவர் த வொசிங்டன் போஸ்ட் இல் எழுதிய செய்தி வருமாறு
வட அமெரிக்காவை நோக்கி வரும் இந்த 200 தமிழ் மக்களையும் மீண்டும் சிறீலங்காவுக்கு அனுப்ப வேண்டும் என பென்ரகன் அதிகாரியை மேற்கொள் காட்டி அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தான கருத்து என்பதுடன், நிலமையை கருத்தில் எடுக்காத நிலைப்பாடும் ஆகும். கப்பலில் வரும் தமிழ் மக்களில் சிலர் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரின் போது சிறீலங்கா அரசும், விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தனர். அதில் போர்க்குற்றங்களும் அடங்கும். இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் தஞ்சம் கோரமுடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எல்லா தமிழ் மக்களும் விடுதலைப்புலிகள் அல்ல, மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லா உறுப்பினர்களும் குற்றங்கள் புரிந்தவர்கள் அல்ல.
அதுமட்டுமல்லாது, மீண்டும் சிறீலங்காவுக்கு அனுப்பப்படும் அகதிகள் அங்கு துன்புறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளன. எந்தவித குற்றங்களும் சுமத்தப்படாது ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் அமைப்பபை சேர்ந்தவர்களை அரசு தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.
அவர்களில் சிலர் சிறைகளில் துன்புறுத்தப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். அடைக்கலத் தஞ்சம் கோரும் மக்களுக்கு தமது கோரிக்கைகளை நீதிமன்றத்தில் முன்வைக்கும் உரிமைகள் உண்டு.
எந்தவித விசாரணைகளுமின்றி எல்லோரையும் போர்க்குற்றவாளிகள் என தெரிவிப்பது நீதிக்கு புறம்பானது என அவர் தனது கருத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
-













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’