வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொப்பிசை பாடகி மாதங்கியின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு

பி பிரபல பொப்பிசை பாடகி மாதங்கி அருள் பிரகாசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றக் கொள்ள முடியாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

'யூ டியூப்' இணையத்தில் தமது பாடல்களை, இலங்கை இணைய பாவனையாளர்கள் பார்வையிட முடியாதவாறு, தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமது பாடல் காட்சிகளை அகற்றுமாறு இலங்கை ரசிகர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து, இவரது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ' யூ டியூப்' இணையத்திலிருந்து பாடல் காட்சிகள் எதுவும் அகற்றப்படவில்லை எனவும், அவ்வாறு பாடல் கட்சிகளை அகற்றக் கூடிய தொழில்நுட்பம் இலங்கையில் கிடையாது எனவும் அனுஷ பெல்பிட்ட மறுப்பு வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’