வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஸ்ரீலமுக அரசுடன் இணைவு ஓர் அரசியல் பெருந்துயரம் : மனோ

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் ஓர் அரசியல் பெருந்துயர நிகழ்வாகக் கருதப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி சுட்டிக்காட்டியுள்ளது
.இது குறித்து முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
"இலக்குடன் கூடிய வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்திருந்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகிச் செல்வதனை தடுத்திருக்கலாம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டமைக்கான பொறுப்பினை ஒற்றுமையிழந்த பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைமையை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
கட்சியின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாம் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’