வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

'புதிய சட்டங்கள் மனிதக்கடத்தல்களை தடுப்பதற்கு உதவுகின்றன'

னிதக் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் இத்தகைய கடத்தல்களைத் தடுப்பதிலும் குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனையளிப்பதிலும் சரியான திசையில் செல்லும் நடவடிக்கைகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
.ஆட்கடத்தல் தொடர்பாக கொழும்பில் நேற்ற நடைபெற்ற, விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித் திட்டமொன்றின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்கத் தூதுவர் பட்றிசியா புட்டெனிஸ், மேற்படி குற்றச்செயலை முறியடிப்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியமும் தலைமை வகிப்பதாகக் கூறினார்.
இலங்கைக் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்காரவும் மேற்படி வைபவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்டமை குறித்து அமெரிக்கத் தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில், அப்பணிப்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகக் கூறினார்.
குமார் சங்கக்கார கருத்துத் தெரிவிக்கையில், மனிதக்கடத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் இதற்கு எதிராக அனைத்து இலங்கையர்களும் திரள வேண்டும் எனவும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’