இவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54000 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது
.விவசாயிகளுக்கான விதை நெல்லை இலவசமாக வழங்குவதுடன் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் வயலை உழுவதற்கான 8000 ரூபாவையும் அத்துடன் உரமானியத்தையும் அரசாங்கம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கிளிநொச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிக்க ரணவக்க அவர்கள் வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் திவாரட்ன மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’