வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சமூகத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  • மூக முன்னேற்றத்திற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சமூகத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே எதிர்காலம் ஒளிமயமானதாக அமையுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்இன்றைய தினம் நடைபெற்ற யாழ் கொட்டடிப் பகுதி மக்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமூக முன்னேற்றத்திற்காகவும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் வளமானதும் ஒளிமயமானதுமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். எனவே உங்களது இணக்கப்பாட்டின் மூலமும் ஒத்துழைப்பின் மூலமுமே இந்தப் பிரதேசமும் மக்களும் வளமான வாழ்வையும் அபிவிருத்தியையும் கண்டடையக் கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் கொட்டடி வில்லூன்றி இந்து மயானத்திற்கான பிரத்தியேகப் பாதை அமைப்பது தொடர்பாகவும் மயானத்தில் மின்சார எரியூட்டி மூலம் உடல்களை தகனம் செய்வது தொடர்பாகவும் அப்பகுதியில் மூன்று நட்சத்திர விடுதியொன்று அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அதன் பிரகாரம் மேற்குறிப்பிட்ட மூன்று நடவடிக்கைகளுக்கும் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் அமைச்சர் தலைமையிலான குழுவினருக்குத் தெரிவித்தனர்.

இதனையடுத்து மயானத்திற்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

அத்துடன் கொட்டடி வைரவர் கோயிலுக்கு அருகாக கடற்கரை நோக்கிச் செல்லும் பாதையில் கோயில் மதிலை மீளமைப்புச் செய்ய வேண்டுமென மக்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து அமைச்சர் அவர்கள் கோயில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதையடுத்து இம்மாத இறுதிக்குள் கோயில் மதிலையும் மணிக் கோபுரத்தையும் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் கோயில் மதில் மற்றும் மணிக்கோபுரம் அமைக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்பதாக அமைச்சர் அவர்களின் யாழ் செயலகத்தில் கொட்டடி வில்லூன்றி இந்து மயானத் தலைவர் கொட்டடி முத்தமிழ் கிராம அபிவிருத்திச் சங்கம் மாதர் சங்கம் மீனாட்சி சனசமூக நிலையம் கோட்டை மீனாட்சி மாதர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சர் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இதன் பிரகாரமே அமைச்சர் கொட்டடிப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அமைச்சர் அவர்களுடன் யாழ் மாநகர முதல்வர் யோகேஜ்வரி பற்குணராஜா யாழ் உதவி அரசாங்க அதிபர் திருமதி சுகுணாவதி தெய்வேந்திரம் யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ கொட்டடி சனசமூக நிலையத்தின் சமாசத் தலைவரும் ஆசிரியர் இரா. செல்வ வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’