வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கொட்டாஞ்சேனையை சுற்றிவளைத்த பொலிஸார் தமிழர்களைப் பதிவு செய்யும்படி வற்புறுத்து கேள்வி எழுப்பியவர்கள் கூட்டிச்செல்லப்பட்டனர்

கொட்டாஞ்சேனைப் பகு தியை நேற்று அதிகாலை பொலிஸார் சுற்றி வளைத்து, தமிழ்மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டுக் கொண்டனர். இது குறித்து கேள்வி எழுப் பிய சில தமிழர்களைப் பொலிஸார் பொலிஸ்
நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பை மேற் கொண்டனர். தமிழர்களை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. தமிழ்மக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஷரத்து அவசரகாலச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நாங்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யவேண்டும் என சிலர் கேள்வி எழுப்பினர் என்றும் அதற்குப் பொலிஸார் வெளிநாடுகளிலுள்ள புலிகள் கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் எனத் தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸ் நிலையத்துக்கு க் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’