அரியவகை பால் ஆமைகளைக் கடத்திய இரு இளைஞர்களை களுவாஞ்சிக்குடி பொலிஸார் நேற்று கைது செய்துள்ள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 23 அரியவகை பால் ஆமைகள் கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டதாக களுவாஞ்சக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
கைது செய்யபட்பட்ட நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை போரதீவு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த முச்சக்கர வண்டியை செட்டிபாளையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்திய போதே இக்கடத்தல் நடவடிக்கை பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’