வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கனடா புலிகளிற்குள் மோதல்! மக்களவை உறுப்பினர்கள் புலிகளின் தமிழ் காங்கிரஸ் நேரு குணா மீது தாக்குதல்

கனடாவில் புலிகளிற்குள் மோதல் வலுவடைந்துள்ளதுடன் கைகலப்பிற்கும் சென்றுள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் புலிகளிற்குள் ஆரம்பித்த காட்டி கொடுப்பு, சொத்துபிரிப்பு என்று; தொடர்ந்த உள்மோதல் தற்போது கைகலப்பாக மாற்றம் கண்டுள்ளது. புலிகளின் ஆஸ்தான அரசில் ஆய்வாளராக செயல்பட்டுவந்த நேரு குணா என்பவர் மீது மக்களவை உறுப்பினர்கள் என்று போலி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் நேரு குணாவின் கை முறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஆண்மையில் தாய்லாந்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரட்டிஸ் கொலம்பியா மாநிலத்தை வந்தடைந்த அகதிகளிற்கு உதவும் நடவடிக்கையில் தமிழ் காங்கிரஸ் என்ற புலிகளின் உப அமைப்பாக செயற்பட்டுவரும் பிறிதொரு அமைப்பினர் உதவி வருவதுடன், அந்த மக்களிற்கு என்று கூறி நிதி சேகரிக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்ற நிலையிலேயே தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அகதிகளாக வந்த மக்களிற்கு உதவக்கூடாது என்று கூறி, மக்களவை உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போதே நேரு குணா என்பவர் காயமடைந்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’