எந்திரன் திரைப்படம் புதிய சரித்திரம் படைக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.கோலாலம்பூரில் நடந்த எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இது வித்தியாசமான சரித்திரம் படைக்கப்போகும் படம். இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.150 கோடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் என்பதால் எந்திரன் சரித்திரம் படைக்கப்போகிறதா அல்லது ஷங்கர்,ஐஸ்வர்யா ராய்,ரஜினிகாந்த்,சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியதால் சரித்திரம் படைக்கப்போகிறதா இல்லை ஹொலிவுட் படங்களின் தயாரிப்புக்கு இணையாக
சொல்லும் அளவுக்கு இந்தியாவிலேயே எந்தப் படமும் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் படம் அதனால்தான் இந்தப்படம் ஒரு சரித்திரம் என்றேன்.இதற்கு கலாநிதி மாறன்தான் காரணம்.இதைவிட அதிக பட்ஜெட்டில் ரூ.1000 கோடியில் கூட எதிர்காலத்தில் படம் தயாரிக்கலாம்.ஆனால் இந்த மாதிரி ஒரு விஞ்ஞானப் படம் தயாராவது தமிழில் இந்தியாவில் இதுதான் முதல்முறை.
முதலில் வேறு ஒரு நிறுவனம் இதை தயாரிப்பதாக இருந்தது.சில சூழ்நிலைகளால் அதிலிருந்து வெளியே வர நேர்ந்தது. அதன் பிறகு கலாநிதி மாறனை சந்தித்தோம்.இந்தப் படத்தின் கதையை கேளுங்கள் என்று ஷங்கர் சொன்னார்.கலாநிதி உடனே உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு பட்ஜெட், எத்தனை நாட்களில் முடிப்பீர்கள் என்று கேட்டார்.ஷங்கரும் பட்ஜெட் சொன்னார்.நாலு நாள் கழித்து முடிவு சொல்கிறேன் என்று கலாநிதி மாறன் கூறினார்.பிறகு நாங்கள் அவரை சந்தித்தபோது "சிவாஜி%27 படத்தின் மொத்த வசூல் விபரத்தையும் தியேட்டர் வாரியாக அவர் வைத்திருந்தார்.இதை சிவாஜி பட தயாரிப்பாளர் கூட வைத்திருந்திருக்க மாட்டார்.
இதைவிட பெரிய படமாக எந்திரனை பண்ணலாம். பிரமாண்டமாக செய்வோம் என்றார்.அவர்தான் கலாநிதி மாறன். எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்வது, பெரிதாக செய்வது, வெற்றிகரமாக செய்வது, அதனால் தான் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல அரசியல் வாதிகள்,பெரிய தொழில் அதிபர்கள் எல்லோரும் கலாநிதி மாறன் யார் என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.இவர் அறிமுகத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள்.ஏனென்றால் இவர் ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார்.இவர் இந்தியாவின் முதல்தர தொழிலதிபராக கட்டாயம் வருவõர்.
சிவாஜி படத்தில் நடிக்கும் போது கமல்ஹாசனிடம் ஷங்கரைப் பற்றி கேட்டேன். கெட்டிக்காரர் ஆனால் அதிகம் வேலை வாங்குவார் என்றார்.ஷங்கருடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது.என்னைப் பற்றி
பெருமையாக பேசினார்கள்.பெருமைப்படும் அளவில் நான் ஒன்றும் செய்யவில்லை என் படங்களில் பஞ்ச் வசனத்தை நானே யோசித்து சேர்ப்பேன். எந்திரனில் அப்படி நானாக எதையும் செய்யவில்லை எல்லாமே ஷங்கர் பார்த்துக்கொண்டார்.
"ரஜினி கபர்தார்%27...
ஐஸ்வர்யா ராய் வழக்கமான நடிகை அல்ல. இதற்கு முன் பல உலக அழகிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாரும் இல்லை. அழகுடன் அபார அறிவும் கொண்டவர் அவர். அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.அவர் நம்ம வீட்டுப்பொண்ணு. ஒரு மனிதனுக்கு ஈகோ இருக்கக்கூடாது. ஈகோவை அழிப்பது ஆன்மிகம். ஈகோ சிறிதும் இல்லாததால் இவ்வளவு புகழ் கிடைத்தும் எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறார் ரகுமான்.யோகி,மகான் என்றால் இமயமலையில் தான் இருக்க வேண்டும் என்று அல்ல கோட் சூட் போட்டுக்கொண்டும் இருக்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’