வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அமைச்சர் எஸ்.பி க்கு எதிராக ஆர்பாட்டம் செய்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு


உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயகா பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வந்த சமயம் கூச்சலிட்டு அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்திய பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி கண்டி பிரதம மாஜிஸ்திரேட் லலித் ஏக்கநாயக்கா உத்தரவிட்டார்.

கடந்த மாதம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற புதிய கட்டிடத் திறப்பு விழவிற்கு சமூகமளித்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயகா மற்றும் பிரதி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினருக்கு கூச்சலிட்ட சம்பவம் தொடர்பான விசாரணை கண்டி நீதிமன்றில் இடம்பெற்ற போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிரப்பித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்ல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஒழுக்கம் தேவை. இப்படியான விடயங்களை நாம் தட்டிக் கழிக்க முடியாது. ஏனெனில் நிலைமையை நாம் சும்மா விட்டால் எதிர்காலத்தில் ஒழுக்கமற்ற ஒரு சமுதாயத்தையே நாம் எதிர் கொள்ளவேண்டி வரும். எனவே குற்றமிழைத்தவர்கள் எனச் சந்தேகிப்பவர்களை உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தும் படி நீதவான் பேராதனைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’