ஜனநாயக தேசிய முன்னணி அங்கத்தவர்கள் காலியில் இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைக்க முயன்றதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் குண்டாந்தடிப் பிரயோகத்தையும் நடத்தினர்.
ஜ.தே.மு. அங்கத்தவர்களான அனோமா பொன்சேகா, விஜித ஹேரத், அர்ஜுன ரணதுங்க உட்பட பலர் கண்ணீர் புகையினால் பாதிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’