வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மண்டேலாவுக்கு சட்டத்திற்குப் புறம்பாக மகள் இருக்கலாம்: நெல்சன் மண்டேலா மன்றம் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (92) சட்டவிரோதமான முறையில் ஒரு மகளுக்கு தந்தையாக இருக்கக்கூடும் என நெல்சன் மண்டேலா மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
1945 ஆம் ஆண்டு கேப் டவுனில் மண்டேலா சந்தித்த ஒரு பெண் மூலம் இப்பெண் குழந்தை பிறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எம்போ பியூலே எனும் பெண் தனது தந்தை யார் என்பதை அறிவதற்காக 12 வருடகாலத்தை செலவிட்ட நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம்; இறந்தார். திருமதி பியூலேவின் நிலைப்பாடு மண்டேலாவின் வாழ்க்கை குறித்த ஆவணங்களுடன் பொருந்துவதாக நெல்சன் மண்டேலா மன்றத்தின் பேச்சாளர் வேர்ன் ஹரிஸ் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளார். எனினும் டி.என்.ஏ. சோதனைதான் மிகச்சரியான உறுதிப்படுதலை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
6 பிள்ளைகளின் தாயான திருமதி பியூலே, தனது தந்தை யார் என்பதை தனது பாட்டியார் மூலம் 1998 ஆம் ஆண்டு அறிந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1945 ஆம் ஆண்டு கேப்டவுனில் வசித்த தனது மகள் செய்பட்டி ஜேன் மொனாகலியுடன் மண்டேலா குறுகிய கால உறவுகொண்டிருந்ததாக அப்பாட்டியார் பியூலியிடம் கூறினாராம். 1945 ஆம் ஆண்டு காலத்தில் தனது முதல் மனைவி எவிலினை மண்டேலா திருமணம் செய்திருந்ததுடன் அத்தம்பதிக்கு ஒரு மகனும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பியூலியின் தாய் மொனாகலி இது குறித்த இரகசியத்தை வெளியிடாமல் 1992 ஆம் ஆண்டு இறந்தார்.
தனது தந்தையை சந்திக்கும் நம்பிக்கையுடன் திருமதி பியூலி பல தடவை நெல்சன் மண்டேலா மன்றத்துடன் தொடர்புகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம்தான் மேற்படி மன்றம் இதற்கு முதல் தடவையாக பதிலளித்தது. பியூலி அனுப்பிய தகவல்களை அம்மன்றம் உறுதிப்படுத்தியதாகவும் அவரை தம்முடன் தொடர்புகொள்ளுமாறும் அது கூறியது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பியூலி இறந்துபோனார்.
தற்போது இவ்விவகாரத்தை கையாளும் நெல்சன் மண்டேலாவின் மகள் ஸின்ட்ஸியிடமிருந்து தகவலை எதிர்பார்த்து பியூலியின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’