நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள்கள் அனைத்தும் பரீட்சைகள் நடைபெறவுள்ள மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்காக 2 லட்சத்து 68 ஆயிரத்து 924 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 230 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 54 ஆயிரத்து 694 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1931 பரீட்சை மத்திய நிலையங்களும், 292 இணைப்பு பரீட்சை மத்திய நிலையங்களும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’