வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

அச்சுவேலி தோப்பு அரிசி ஆலையினை மீண்டும் இயங்கவைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை.

லிகாமம் கிழக்கு அச்சுவேலி தோப்பு கொலனியிலுள்ள பிரபல்யமிக்க ஆதவன் அரிசி ஆலையினை மீண்டும் இயங்க வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரிசி ஆலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளின் பேரில் இன்று பகல் அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அரிசி ஆலை நிர்வாகத்தினருடனும் பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினார். பெருந்தொகையான நெல்லை அவித்து காயவைத்து புழுங்கல் அரியாக்கி குடாநாடெங்கும் விநியோகித்துவந்த மேற்படி அரிசி ஆலையானது 2006ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் மற்றும் ஏ9 தரைப்பாதை மூடப்பட்டதனால் தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. இதன்காரணமாக அங்கு தொழில் புரிந்தோரும் தமது வேலையினை இழந்திருந்தனர்.
இவ்விடயங்களை நேரடியாக கண்டுகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரைவில் மேற்படி அரிசி ஆலையினை மீள இயங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்தார். குறிப்பாக வெளியூரிலிருந்து நெல்கொள்வனவை எதிர்பார்க்காமல் எதிர்வரும் காலபோக செய்கையின் உள்ளுர் நெற்செய்கையாளரிடமிருந்து நெல்லைப் பெற்று அரிசி உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதன் ஆரம்ப நடவடிக்கையாக அரிசி ஆலை கட்டடம் நெல் அவிக்கும் மற்றும் குற்;றும் இயந்திரங்கள் மற்றும் சுற்றாடலை புனரமைத்து மீளமைக்க தமது அமைச்சினூடாக உரிய உதவிகள் பெற்றுத்தரப்படும் என அமைச்சர் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’