அடுத்த மாதம் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபைக் கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்ல இருக்கும் இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்க இருக்கிறார்.
வர்த்தகம், கைத் தொழில் ஆகிய துறைகளை சேர்ந்த தலைவர்களும் ஜனாதிபதியுடன் இந்த விஜ யத்தில் கலந்து கொள்வார்கள். இலங்øக யில் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஊக் குவிப்பது பற்றி அவர்கள் அமெரிக்க வர்த் தக, கைத்தொழில் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இந்த பணயத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ மெக்ஸிகோ, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்கள் தொடர்பான உயர்மட்ட முழுநிறைவுக் கூட்டத்திலும் பொதுச் சபையின் கூட்டத் தொடர்களிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.
மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்கள் தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவதற்கு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் உச்சி மகாநாட்டுக் கூட்டத்தில் 150க்கும் அதிகமான உலகத் தலைவர்கள் உரைநிகழ்த்த இருக்கிறார்கள். செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகளின் தொடர்ச்சியாக மிலெனியம் அபிவிருத்திக் குறிக்கோள்கள் தொடர்பான உச்சிமகாநாடு நடைபெறும். ஆரம்ப தினமான செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பிறேஸில், அமெரிக்கா, சுவிற்ஸர்லாந்து, மாலாவி, பாகிஸ்தான், கொஸ்டா றிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களை அடுத்து ஜனாதிபதி ராஜபக்ஷ 7ஆவது தலைவராக உரைநிகழ்த்துவாரென பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த வருடம் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படமை தொடர்பான விடயங்களை எடுத்தக் கூறுவாரென வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் குழு விசாரணை செய்ய முயற்சிசெய்துவரும் விடயங்களை உள்ளடக்கியதாக இந்த உரை இருக்குமென கருதப்படுகிறது என்று இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் விஜயத்தின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படலாம் என்று வெளிவிவகார அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் புலம்பெயர் தமிழர்களாலோ விடுதலைப்புலிகளாலோ அல்ல என்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் புலம்பெயர் சிங்கள மக்கள் குழு ஒன்றினால் என்றும் தெரியவருவதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், கடந்த மாதம் லொஸ் ஏஞ்ஜல்ஸில் நடத்தப்பட்ட இதேபோன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் 15 பேருக்கும் குறைவானோரே கலந்து கொண்டார்கள் என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதிக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பு வைபவத்தின் போதும் நியுயோர்க் பௌத்த விகாரைக்கான அவரது விஜயத்தின் போதும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் இந்த இரண்டு வைபவங்களிலும் கலந்து கொள்ள இருக்கும் பார்வையயாளர்ளை தெரிவு செய்வதில் மிகக் கவனமாக இருக்கும்படியும் நியூயோர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் சபைக்கான இலங்கைத் தூதரகத்திடம் அமைச்சு அறிவித்துள்ளது. பிரதானமாக, எந்தவித அரசியல் முரண்பாடுகளையோ சர்ச்சைகளையோ தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டது போல, நியூயோர்க் ஆசிய சங்கத்தில் அடுத்த மாதம் நடத்த இருந்த பகிரங்க சொற்பொழிவை தவிர்த்துக் கொள்வதென ஜனாதிபதி தீர்மானித்தள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி மாலை 6.30க்கு ஆசிய சங்க கூட்டத்தில் உரைநிகழ்த்த இருக்கிறார். யுத்தத்தின் பின்னரான இலங்கை என்ற பொருள் பற்றி அமைச்சரின் உரை அமையும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’