வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எகெட் நிறுவனம் உதவி(பட இணைப்பு)

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின் தங்கிய கிராமமான தோனிநாட்ட மடுக்குளம் கிராம மக்களுக்கு எகெட் நிறுவனத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன
.தமிழ் தேசயக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.லோகேஸ்பரன், மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுளநாயகி ஆகியோரின் வேண்டு கோளின் பேரில் இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இக்கிராமத்திலுள்ள 48 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எகெட் நிறுவனத்தின் ஊடகப் பொறுப் பொறுப்பதிகாரி மைக்கல் தெரிவித்தார்.
இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அப்பகுதியின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர் எஹெட் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’