இலங்கையில் நீதித்துறையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர் சேர்.பொன். இராமநாதன் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் புகைப்பட இணைப்பு
. இன்றைய தினம் (30) யாழ் பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகரான சேர் பொன் இராமநாதன் அவர்கள் முன்னொரு காலத்தில் அரசியற் களத்தில் நின்ற போது சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.
அதன் மூலம் அவர் இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவராக இன்றும் திகழ்கின்றார். இலங்கையில் மூவின மக்களும் சாந்தியுடனும் சமாதானத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதில் குறிப்பாக நீதித்துறையின் வளர்ச்சிக்காகவும்அது சார்ந்த செயற்திட்டத்திற்காகவும் சேர் பொன் இராமநாதன் அரும்பாடுபட்டு உழைத்தார்.
அவர் கல்விக்காக ஆற்றிய பணியை எவரும் எளிதில் மறந்து விடமாட்டார்கள் என்றும் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையையும் நல்ல முறையில் கட்டியெழுப்பி அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உழைக்கத் தயாராக இருக்கின்றேன் என்றும் பல்கலைக்கழகத்தின் தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி தேவைகள் அவ்வப் போது நிவர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர் தினம் இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’