வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

'புலிகள் மீள ஒன்றிணைவதைத் தடுப்பதற்காக வடக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளது'

யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியிலிருந்து சிவிலுடையில் போரிட்டதாகவும் அதனால் இராணுவத்தினரையும் பொதுமக்களையும் வேறு பிரித்தறிவது கடினமாக இருந்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்
.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, புலிகள் மீண்டும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்காக வடக்கில் கணிசமான அளவு இராணுவத்தினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் சில மட்டங்களில் செயற்படுவதாகவும் இதனால் இராணுவம் இன்னும் நிலைகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Pix: Indra Ratna Balasurya

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’