வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

மீண்டும் கூடவுள்ளது சர்வகட்சி குழு

லங்கையில் நீண்ட காலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மீண்டும் கூடுவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு பல முறை கூடி தனது அறிக்கையை தயாரித்தது. அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் பல மாதங்களுக்கு முன்னரே கையளிக்கப்பட்டது.
ஆனால் அரச தரப்பில் அந்த அறிக்கையை வெளியிடாததால், அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த இரண்டு உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நிசாம் காரியப்பர் மற்றும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்பினராக இருக்கும் ஆர் யோகராஜன் ஆகியோர் அதன் முக்கிய விடயங்களை அண்மையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.
இந்த குழு மீண்டும் கூடுவதற்கான சரியான நேரம் வந்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தற்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து தனது கருத்தை அவர் தெரிவித்த பிறகு இறுதி வடிவம் கொடுக்கப்படும் எனவும் திஸ்ஸ் விதாரண தமிழோசையிடம் கூறினார்.
கையொப்பம் இல்லாத அறிக்கை
ஆர்.யோகராஜன்-பா.உ
ஆர்.யோகராஜன்-பா.உ
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் முடிவு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் அதில் பங்கு பெற்ற எந்த உறுப்பினர்களும் கையெழுத்திடவில்லை எனவும் அதன் தலைவர் கூறுகிறார்.
அவர் கூறுவதை அதில் உறுப்பினராக இருந்த ஆர் யோகராஜனும் தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதியின் கருத்துக்கள் கிடைக்க பெற்று இறுதி செய்யப்படும் அறிக்கையில் அனைத்து உறுப்பினர்களும் பின்னர் கையெழுத்திடுவார்கள் எனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவிக்கிறார்.
நாட்டில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு மற்றும் அரசியல் சாசன மாற்றத்துக்கான பரிந்துரைகள் குறித்து விவாதித்த இந்தக் குழுவின் உறுப்பினர்கள் செய்துள்ள பரிந்துரைகள் குறித்த தகவல்களை வெளியிட அதன் தலைவர் மறுத்து விட்டார்.
இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ள நிலையில், கையெழுத்திடாமல் ஒரு அறிக்கையை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி அவரது கருத்தை கேட்டது சரியென்றும் அவர் வாதிடுகிறார்.
இந்தக் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது என்பதும் நூற்றுக்கும் அதிகமான முறை கூடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’