வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வானில் இன்று முக்கோண வடிவில் மூன்று கிரகங்கள்

செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய மூன்று கிரகங்கள் முக்கோண வடிவில் இன்றும் நாளையும் வானில் தோன்றும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அற்புத காட்சியை வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன.
பூமியிலிருந்து வெகு தொலைவில் சுற்றி வரும் இந்தக் கிரகங்களை வெறும் கண்களால் காணமுடியாது. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கிரகங்கள் பூமிக்கு அருகில் வரும் போது இவற்றைப் பார்த்து ரசிக்க முடியும்.
இந்த வகையில் செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய மூன்று கிரகங்களையும் இன்றும் நாளையும் வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்த மூன்று கிரகங்களும் பார்ப்பதற்கு ஒரு முக்கோணம் வடிவில் காட்சியளிக்கும். ஒரு வார காலத்தில் படிப்படியாக முக்கோண தோற்றம் மாறும். இந்த மூன்று கிரகங்களையும் மாலை நேரத்தில் இருட்டுவதற்கு முன் பார்க்கலாம்.
இன்று மாலையில் வெள்ளியும் அதன் கீழ் பிறை நிலாவும் தெரியும்.
நாளை வெள்ளிக் கிரகத்தின் இடப்புறமாக நிலா தெரியும். வெள்ளிக் கிரகம் சற்றுப் பிரகாசமாகவும் அதன் அருகே சனி மற்றும் செவ்வாய் சற்று மங்கலாகவும் தெரியும்.
இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது. அதில் பல அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களை வெறும் கண்ணால் காணும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பைத் தவறவிடாது, பயன்படுத்திக் கிரகங்களைப் பார்த்து மகிழுமாறு ஸ்கை அண்ட் டெலஸ்கோப் இதழின் மூத்த ஆசிரியர் ஆலன் மெக் ரோபர்ட் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’