முஸ்லிம் சமய விவகார கலாசார திணைக்களத்தின் ஆலோசனையுடன் புராதன பள்ளிவாசல்களை தொல்பொருளியல் பிரதேசங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மரபுரிமை மற்றும் கலாசார அமைச்ச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்
.இதுவரை எந்தவொரு பள்ளிவாசலும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருள் இடங்களாக பிரகடனப்படுத்தப்படவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இலங்கையில் பல நூற்றாண்டு காலாமாக உள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார். இலங்கையில் பழமை வாய்ந்த பள்ளிவாசலாக பலங்கொடையில் உள்ள தப்தர் ஜிலானி பள்ளிவாசல் உள்ளது என தெரிவித்தார்.
பல பழமைவாய்ந்த பள்ளிவாசல்கள் உள்ளன. அவை பல நூற்றாண்டு பழமைவாய்ந்தவைகளாகும். இவற்றை தொல்பொருள் இடங்களாக பிரகடனப்படுத்துமாறு அமைச்சரிடம் கோருகின்றோன். முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் ஆலோசனைகளை பெற்று இதனை செய்ய முடியும் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதனையடுத்து, உடனடியாக இதனை மேற்கொள்வதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஏற்றுக்கொண்டார்.
1815ஆம் ஆண்டுக்கு முதல் நிர்மாணிக்கப்பட்ட சமயஸ்தானங்களை தொல்பொருள் இடங்களாக பிரகடனப்படுத்த முடியும் என்றார் பவித்திரா வன்னியாராச்சி கூறிஅனார்.
இதனையடுத்து, அவசரமாக இதனை மேற்கொள்வதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஏற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர், தொல்பொருள் பிரதேசமாக பள்ளிவாசல்களை பிரகடனப்படுத்தும் போது பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை பிரகடனப்படுத்த வர்த்தமானி பிரசுரிக்குமாறு கலாச்சார அமைச்சரிடம் வேன்டுகோள்விடுத்தார்.
இது இலங்கையில் முஸ்லிம்கள் முதலில் குடியேறிய இடமாக கருதப்படுவதாக அவர் கூறினார்.
இதற்கு சாதகமான முறையில் அமைச்சர் பதிலளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’