வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மாணவிகளுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியரை மீண்டும் நியமிப்பதற்கு எதிர்ப்பு

ட்டக்களப்பு கல்வி வலயத்தில் தாண்டியடியில் உள்ள பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியரை மீண்டும் அப்பாடசாலைக்கு நியமிக்கக் கூடாது என அப்பாடசாலையின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்

.இவ்விடயம் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போலுடன் தான் தொடர்பு கொண்டதாக அரியநேத்திரன் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் வழக்கு முடிவுற்ற பின்னரே தான் இது குறித்து நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும், இருப்பினும் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியரை அப்பாடசாலைக்கு மீண்டும் நியமிக்கமாட்டோம் என தன்னிடம் வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அரியநேத்திரன், மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தவறாகும். எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள தாண்டியடி பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆசரியரை மீண்டும் அப்பாடசாலைக்கு நியமிக்கக் கூடாது என என்னிடம் பெற்றௌர் முறைப்பாடு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். கடந்த 10ஆம்திகதி வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த ஆசிரியருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அரியநேந்திரன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’