வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

தமது வேலைவாய்ப்பு மற்றும் நியமனம் தொடர்பாக உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு.

யாழ். பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமா பட்டம்பெற்ற மாணவர்கள் தமக்குரிய அரசாங்க வேலைவாய்ப்பு தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனைக்கு வருகை தந்த மேற்படி பட்டம்பெற்ற மாணவ பிரதிநிதிகள் ஏனைய துறைகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு உள்ளது போல தமக்கும் அரச நியமனத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு அரச நியமனத்தில் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர். குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முழுமுயற்சியின் காரணமாக நுண்கலைத்துறை பட்டம் பெற்றோர் பட்டதாரி நியமனம் பெற்றுக்கொள்வதை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன் இவ்விடயத்தில் அமைச்சரவர்கள் எமக்கு உதவிபுரிய வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

உடற்கல்வி டிப்ளோமா பட்டம்பெற்ற மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் கூடிய கரிசனை எடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இப்பிரச்சினையானது யாழ். பல்கலைக்கழகத்திற்கு மட்டும் உரியதொன்றல்ல எனக்குறிப்பிட்டதுடன் யாழ். கல்வியியல் கல்லூரியிலும் இதையொத்த கோரிக்கை உண்டு எனத்தெரிவித்தார். எனவே இதுசம்பந்தமாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கல்வியியல் கல்லூரி பீடாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி விரைவில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காணமுடியும் எனத் தெரிவித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’