வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இலத்திரனியல் ஊடக பிரதிநிதிகளின் சந்திப்புக்கு திட்டம்

லத்திரனியல் ஊடகங்களின் பிரதிநிதிகளின் சந்திபொன்றுக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல்லெ தெரிவித்தார்
.சவால்களிடையே நல்லுறவையும் நட்பையும் வளர்ப்பதே இதன் நோக்கமாகும். அண்மைக்கால நிகழ்வுகள் சில நாட்டுக்கும் ஊடகத்துறைக்கும், அரசாங்கத்திற்கும் நல்லதல்ல எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை புதிய துறைமுகத்தில் நீர் நிரப்பும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய ஏன் சிரஸ நிறுவனத்தை அனுமதிக்கவில்லை என கேட்ட போது அது பழிக்கு பழி வாங்கும் நிகழ்வாக இருக்கலாம் என அமைச்சர் பதிலளித்தார்.
"மடுத்திருவிழா நிகழ்வுகளை அடுத்த நாளில் மீள் ஒலிபரப்பு செய்ய ரூபவாஹினி தொலைக்காட்சி அனுமதி கேட்ட போது சிரஸ தொலைக்காட்சி நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த் ஒளிபரப்புக்கான தனி உரிமையை சிரஸ நிறுவனம் பெற்றிருந்தது. முன்னர் ரூபவாஹினி மடுத்திருவிழா நிகழ்வுகளை நாடு முழுவதும் ஒளிபரப்பி வந்தது.
சிரஸ தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மடுத்திருவிழா நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்வதற்கு தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தது. 38 பொறியியலாளர்களையும் கொடுத்து உதவியது. இதை கருத்தி கொண்டு சிரஸ நிறுவனம் நடந்திருக்க வேண்டும்.
கண்டி எசல பெரஹேராவை ஒளிபரப்பு செய்யும் தனியுரிமையை ரூபவாஹினி கொண்டுள்ள போதிலும் அது, சகல நிறுவனங்களையும் அந்த காட்சிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதியளித்துள்ளது" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’