வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஐ.தே.க மீது ஜே.வி.பி. விசனம்

ரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.தே.க.வை ஜே.வி.பி. விமர்சித்துள்ளது
.'அரசாங்கத்தின் முயற்சி குறித்து நாம் பொதுமக்கள் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளோம். பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாம் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். ஆனால் இது தொடர்பான பொதுமக்களின் கவனத்தை ஐ.தே.கவுடன் பேச்சு நடத்துவதன் மூலம் அரசாங்கம் திசை திருப்புகிறது. எனவே, உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் விளைவுகளுக்கு ஐ.தே.க.வும் பொறுப்பேற்க வேண்டுமென நாம் கருதுகிறோம்' என இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறினார்.
அடுத்து நாடாளுமன்றம் கூடவுள்ள வாரத்தில் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசாங்கம் மேலும் பலப்படுத்திக் கொள்ளும் எனவும் ஜே.வி.பி. கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’