நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை, ரயில்வே பொதுமுகாமையாளர் ஆர்.பி. விஜேசேகரவை பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன
.10 மில்லியன் ரூபாவை தவறாகக் கையாண்டதாக ரயில்வே பொதுமுகாமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழு, அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு முடியும்வரை விஜேசேகரவை பதவியிலிருந்து இடை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’