வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

யாழ். வாக்காளர் பதிவுகள் உரிய காலத்தில் பூரணப்படுத்தப்படும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புப் பதிவை பூர்த்தி செய்வதில் பல வகையான தொடர்பாடல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த போதிலும், தேர்தல் திணைக்களம் குறித்த காலத்திற்குள் திருப்தியான முறையில் வேலையை பூரணப்படுத்தும் என தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

438 கிராம சேவையாளர் பிரிவுகளில் 30 பிரிவுகளில் மாத்திரமே 2010 க்கான வாக்காளர் இடாப்பை பூர்த்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்திருந்தன.
இதற்கு பதிலளிக்கையில் "கிராம அதிகாரிகளின் பற்றாக்குறைகளையும் காலத்துக் காலம் மீளக்குடியமர்த்தப்படும் மக்களின் புது வருகையும் இந்தப் பணிக்கு தடங்கல் ஏற்படுத்துவதாக உள்ளது" என பிரதி தேர்தல் ஆணையாளர் பி.எம். சிறிவர்தன கூறினார்.
சுதந்திரமான, நீதியான தேர்தலுக்கான இயக்கத்தின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், "யாழ்ப்பாணத்தில் வாக்காளர் இடாப்பு பதிவு வேலைகள் மிக மெதுவாக நடைபெறுவதாகவும் நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் தொகுதிகளிலுள்ள 68 கிராம அதிகாரிகள் பிரிவில் 8 இல் மட்டுமே இந்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’