மானிப்பாய் தொகுதி மக்களினதும் பொது அமைப்புக்களினதும் வேண்டுகோளின் பேரிலும் மானிப்பாய் தொகுதியின் மேம்பாட்டுப்பணிகளை ஆராயும் பொருட்டும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி விஜயத்தினை மேற்கொண்டார் புகைப்படம் இணைப்பு
.இன்று (24) மாலை மானிப்பாய் பிரதேச சபை வளாகத்தைச் சென்றடைந்த அமைச்சரவர்களை பொதுமக்களும் பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அன்புடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மானிப்பாய் பிரதேச சபை பொதுமண்டபத்தில் நிறைந்திருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சரவர்கள் தனித்தனியாக கவனம் செலுத்தி உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக மாதகல் மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கங்கள் மாதகல் மயான நிர்வாகத்தினர் மாதகல் பண்டத்தரிப்பு சாந்தை பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் காக்கைதீவு வீடமைப்புத்திட்டம் பிரதேச மின்சார விநியோகம் மானிப்பாய் பட்டினசபை சிவன் கோவில் குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் மருதடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் வலிதென்மேற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் அலகு மானிப்பாய் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் மானிப்பாய் வர்த்தக சங்கம் பிரதேச மாதர் சங்கங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் ஏனைய பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக கலந்துரைiயாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் வலி.தெற்கு மேற்கு மானிப்பாய் பிரதேசத்தில் மேற்படி பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினர் மற்றும் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அக்கறையுடன் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவற்றை உரிய கோரிக்கை மனுக்கள் ஊடக சமர்ப்பிக்கும்படியும் உயர் அதிகாரிகளுடனும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு அதற்குரிய தீர்வுகளை விரைவிலேயே பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.
இவ்விஜயத்தின் முன்னதாக மானிப்பாய் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுவரும் தண்ணீர் பவுஸரையும் அமைச்சரவர்கள் நேரடியாகப் பார்வையிட்டமை மற்றுமோர் விடயமாகும்.
இன்றைய விஜயத்தின் இறுதியில் அங்கு கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மானிப்பாய் தொகுதி மேம்பாட்டில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பங்களிப்புச் செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொண்டதுடன் அடிக்கடி தான் நேரடியாக விஜயம் செய்து முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் மானிப்பாய் பிரதான வீதி அகலமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதனால் பாதிக்கப்படவிருக்கும் ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிரப்பு நிலைய வளாகம் மற்றும் தனியார் காணிகளையும் அமைச்சரவர்கள் நேரடியாகச்சென்று பார்வையிட்டு அதற்குரிய மாற்றீடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
மானிப்பாய் தொகுதி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இன்றைய சந்திப்பின்போது வலி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர் திருமதி அன்ரன் லோகநாயகம் மானிப்பாய் பிரதேச சபைச் செயலாளர் திருமதி பு.சிவலிங்கம் வடபிராந்திய கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தர்மலிங்கம் கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் திணைக்கள உயரதிகாரிகள் ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரன் மானிப்பாய் பிரதேச பொறுப்பாளர் தோழர் ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’