போதிய கலைஞர் இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் கண்டி பெரஹரா சவால்களை எதிர்கொள்ளலாம் என நடனத்துறை நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கண்டிய நடனத்துறையில் தேர்ச்சி மிக்கோர் தினந்தோரும் குறைந்து வறுவதனால் கண்டி பெரஹராவை நடத்துவதுக்கு எதிர்காலத்தில் கடினமான நிலை ஏற்படுமென அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1919 ம் ஆண்டு முதன் முதலாக கண்டிய நடனம் கண்டி பெரஹராவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கண்டி பெரஹராவில் கண்டிய நடனத்துக்கு முன்னுரிமை கிடைக்கிறது.ஆரம்ப காலத்தில் பாரம்பரியமாக இன் நடனத்துறை பாதுகாக்கப்பட்ட போதிலும் தற்போது அதற்கான ஒரு வழிமுறை இல்லாததன் காரணமாக கண்டிய நடனம் பொது மக்கள் மத்தியிலிருந்து அழிந்து கொண்டு போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் தற்போது பாவணையிலுள்ள 50 ரூபா கடதாசி நாணயங்களில் பொறிக்கப் பட்டிருக்கும் உருவத்திற்கு சொந்தக்காரரான கண்டி ஹாரிஸ்பத்துவயை சேர்ந்த சய்மன் மாலகம்மன என்பவரின் புதல்வரும் பிரசித்தி பெற்ற கண்டிய நடன நிபுனருமான ரஞ்சித் மாலகம்மன எமது இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில்: அரசாங்கமோ தனியார் நிறுவனங்களோ கண்டிய நடனத்துறையை முன்னேற்றுவதற்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்காமையால் எதிர்காலத்தில் கண்டி பெரஹராவுக்கு கூட திறமைவாய்ந்த நடன நிபுணர்கள் அரிதாகிவிடுவார்களெனவும் தெரிவித்தார்.
உலக புகல்பெற்ற கண்டிய நடன நிபுணரான தித்தபஜ்ஜல சுரம்பா என்பவரின் மகனான எம்.அய். சுமனவீர கருத்து தெரிவிக்கையில் கண்டிய நடனத்துறையில் நிபுணர்கள் குறைந்து வருவதனால் கண்டி எசல பெரஹராவில் தற்போது பாடசாலை மாணவர்களே கூடுதலாக பங்கெடுப்பதாகக் கூறினார். __
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’