வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் போலீஸார் குவிப்பு : லத்திகா சரண்

சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் 70 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.லத்திகா சரண் கூறியுள்ளார்.


சென்னை புனித கோட்டையில் நடந்த சுதந்திர தின ஒத்திகை மற்றும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட டிஜிபி லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாதுகாப்பு சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏதுமில்லை. அச்சுறுத்தல் இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு தீவிரமான ஆவண சோதனைக்கு பின்னரே பயணிகள் வெளியே அனுப்பப்படுவர்," என்றார் லத்திகா சரண்.
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகிறது.
எல்லா நகரங்களிலும் வாகன சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிற மாநில எல்லைப்பகுதியிலிருந்து ஊடுருவலை தடுக்க தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் நகரத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
சென்னை நகரை பொறுத்தவரை சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றிரவு முதல் இந்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. தலைமைச் செயலக பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் நாளை இரவு முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த கோபுரங்களிலிருந்து பைனாகுலர்கள் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு போடப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’