வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பயன்தரும் மரங்களை குடாநாடெங்கும் வளர்க்க அமைச்சர் திட்டம்!

பொது மக்களுக்கும் சூழலுக்கும் நன்கு பயன்தரக்கூடிய மரக் கன்றுகளை யாழ் குடாநாடெங்கும் வளர்ப்பதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்
.இதன் பிரகாரம் இனங்காணப்பட்டுள்ள பல்வேறு மரக் கன்றுகள் நடப்படவுள்ளன.
இதே நேரம் குறைந்த காலப்பகுதியில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய மரக்கன்றுகளும் புதிய வகை மரக் கன்றுகளும் குடாநாட்டில் வளர்ப்பதற்காக இனங்காணப்பட்டுள்ளன.
எதிர்வரும் பருவ மழைக் காலத்திற்கு முன்பதாக இக் கன்றுகளை நாட்டுவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வகையில் முருங்கை பப்பாசி தோடம் மாதுளம் கமுகு மரமுந்திரி ரிச்சி டிரகன் புரூட் நெல்லி சவுக்கு போன்ற பல்வேறு பயன்தரக் கூடிய மரக் கன்றுகள் இங்கு நடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’