நீர்கொழும்பில் கட்டுநாயக்க முதலீட்டுச்சபையில் கணினிப் பொறியியலாளராக கடமையாற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை தாக்கப்பட்டுள்ளார்.
இவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்போது, குறித்த நபரின் வாகனமும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலுக்கு உள்ளான நபர் பணியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபரை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’