மட்டக்களப்பு - கல்முனை பிரதான் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும் மகளும் நேற்றிரவு உயிரிழந்தனர்.
இதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், றம்புக்கணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
றம்புக்கணையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் ஒரு முச்சக்கரவண்டியில் மட்டக்களப்பை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது கற்கள் ஏற்றி வந்த லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் அப்துல் ஹசன் சுப்ஹான், நோனா தல்ஹா (வயது 44) என்ற பெண்ணும் அவரது மகளான பாத்திமா ரிமாவுமே (வயது 7) பலியானவர்களாவர் என காத்தான்குடிப் பொலிஸ் நிலைய வாகன போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஹேரத் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’