உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவை அமுல்படுத்தத் தவறியதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்தன தொடுத்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராஜாவுக்கூடாக மேற்படி பொலிஸ் அத்தியட்சகர் சமர்ப்பித்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை உத்தரவை தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு உயர்நீதிமன்றம் மே மாதம் 25 ஆம் திகதி உத்தரவிட்டபோதிலும் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவித்தல்களை விடுக்கவில்லை எனவும் தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் சீருடைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை பொலிஸ் மா அதிபர் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதாகவும் இதன்மூலம் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’