வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 25 ஜூலை, 2010

அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து சர்வதேசத்திற்கு இலங்கை எச்சரிக்கை

துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறோம் என்ற உணர்வு ரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கப்படுவது சட்டவிரோத குடியேற்றத்தையே ஊக்குவிக்கும் என சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

வியட்நாமில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய அமைப்பின் 17 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் கடத்தல்களை - குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்களையும் பொருட்களையும் கடத்துவதை - முறியடிப்பதற்கு இலங்கை கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
துன்புறுத்தப்படுவதான உணர்வின் அடிப்படையில் அகதி அந்தஸ்து வழங்குவது சட்டவிரோத குடியேற்றத்தையே குடியேற்றத்தையே ஊக்குவிக்கும். எனவே பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரப்புகளில் காவலில் ஈடுபடுதல் ஆகியவற்றினால் சட்டவிரோத இடப்பெயர்வுகளையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் தடுக்க முடியாது எனவும் அவர்பிரதியமைச்சர் குணவர்தன கூறினார்.
பயங்கரவாத அமைப்புகளிடம் எல்லைகளை ஊடறுத்துச் செல்லும் ஆற்றலும் நவீன தொழில்நுட்பங்களும் இருப்பதாகக் கூறிய அவர் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள் மற்றும் அனுதாபிகளின் நிதியளிப்புச் செயற்பாடுகள் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகடந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் எனக் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’