பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான நகைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் உலகின் மிகப் பிரபலமான வைரங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்ற கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் இந்த வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர முடியுமா என்று கேட்கப்பட்டபோது, அது பிரிட்டனிடமேதான் இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.இந்த வைரம் பற்றிய பதிவுகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகிறன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சிசெய்த மன்னர்களிடம் இந்த வைரம் கை மாறி வந்துள்ளது.
கோஹினூர் வைரம் பதித்த மணிமகுடம் |
1849ல் பிரிட்டிஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
"1730ஆம் ஆண்டு தொட்டே இந்த வைரம் இந்திய ஆட்சியாளர் ஒருவரின் கைகளில் இருந்திருக்கவில்லை. ஆகவே
இந்த வைரத்தை இந்தியாவுக்குத்தான் திருப்பித்தர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் இல்லை என்றே தோன்றுகிறது" என பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான ஆபரணங்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி இருப்பவரான சரித்திர ஆசிரியரான கலாநிதி அன்னா கீ கூறுகிறார்.
இந்த வைரத்தை இந்தியாவுக்குத்தான் திருப்பித்தர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் இல்லை என்றே தோன்றுகிறது" என பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான ஆபரணங்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி இருப்பவரான சரித்திர ஆசிரியரான கலாநிதி அன்னா கீ கூறுகிறார்.
கோஹினூர் வைரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்ற ஒரே இடமாக அந்தக் காலத்தில் இந்தியா மட்டுமே இருந்ததால், அந்த வைரம் இந்தியாவில் இருந்துதான் தோண்டியெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம்.
இந்த வைரம் மிகவும் அழகியது விலைமதிப்பற்றது என்றாலும், ஆண் ஆட்சியாளர் ஒருவர் இந்த வைரத்தை அணிந்திருந்தால் அவர் அரியணை துறக்க நேரிடும் என்ற ஒரு சாபமும் இந்த வைரத்துக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
பிரிட்டிஷார் இந்த சாபத்தை உண்மையென நம்புகிறார்கள் போலும். பிரிட்டனை ஆண்ட ராணி, ராஜாக்களில் கோஹினூர் வைரத்தை அணிந்தவர் என்றால் என்றால் அது விக்டோரியா ராணியார் மட்டும்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’