வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஜூலை, 2010

பதுக்கிவைக்கப்பட்ட 70 ஆயிரம் சங்குகள் கைப்பற்றப்பட்டன

புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்ட கட்டைக்காடு கிராமத்தில் 30 இலட்சம் பெறுமதியான 70 ஆயிரம் சங்குகளை முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முந்தல் பொலிஸார் கட்டைக்காடு பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட தேடுதலின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த சங்குகளை கைப்பற்றினர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சின்னப்பாடு கொத்தாந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சங்குகள் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சங்குகள் முந்தல் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’