வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 31 ஜூலை, 2010

'மீண்டும் அங்கீகாரம் பெறுவோம்'

 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் அங்கீகாரம் பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, மாநில கட்சியொன்று அங்கீகாரத்தை இழந்தால் அந்தக்கட்சி ஏற்கனவே பயன்படுத்தி வந்த தேர்தல் சின்னத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மாநிலக் கட்சியொன்றின் அங்கீகாரத்துக்குத் தேவையான மொத்த வாக்குகளின் குறைந்தபட்ச 6 சதவீதத்துக்கு 0.02 சதவீதம் அளவான வாக்குகளே தமது கட்சிக்கு குறைவாக உள்ளதாக தாம் முன்வைத்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
அதேபோல், புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலக் கட்சி அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 6 சதம் வாக்குகளைப் பெற்றால்தான், அந்தக் கட்சிகளுக்கு தேசிய கட்சி அல்லது மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைக்கும்.
கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் நேரில் விளக்கமளிக்க வாய்ப்புத் தரப்பட்டது.
அதன்படி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து, அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டனர்.
ஆனால், வழக்கமான விதிமுறைகளின் அடிப்படையில், அந்தக் கட்சிகளுக்கான அங்கீகாரங்கள் ரத்து செய்யப்ட்டிருப்பதாக தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்புக்கள்

அங்கீகாரம் ரத்து செய்யப்ட்ட கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்ட்ட சின்னங்களைத் தக்க வைத்து்க கொண்டாலும், அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சலுகைகளைப் பெற முடியாது.
குறிப்பாக, அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தேர்தல் நேரத்தில் பிரசாரம் நடத்த முடியாது. தேர்தல் ஆணையம் கூட்டும் கூட்டங்களில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைப் போல இந்தக் கட்சிகள் பங்கேற்க முடியாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’