வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 31 ஜூலை, 2010

தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றேன் மேல் நீதிமன்றில் சீமான் மனு

வே லூரில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் என சென்னை மேல் நீதிமன்றில் இயக்குனர் சீமான் மீண்டும் தெரிவித்துள்ளார்.


தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து நடந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.இரு பிரிவினருக்கு இடையே பகைமை உணர்வை தூண்டுவதாக இவரது பேச்சு உள்ளது எனக் கூறி சீமான் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.நீதிபதி உத்தரவிட்டும் சிறையில் முதல் வகுப்பு வழங்கப்படவில்லை.தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் எனக் கூறி சென்னை மேல் நீதிமன்றில் "ஹேபியஸ் கார்ப்பஸ்%27மனுவை சீமான் தாக்கல் செய்தார்.இதற்கு வேலூர் சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த அறிக்கையில் தனிமைச்சிறையில் அடைக்கப்படவில்லை.சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் ஓ.எப்.வார்ட்டில் அனுமதிக்கப்பட்டேன்.அப்போது நான் மட்டுமே அந்த பிரிவில் இருந்தேன் என் அறைக்கு அருகில் உள்ள அறையில் 15 ஆம் திகதியன்று 15 பேரை அடைத்தனர்.மேல் நீதிமன்றில் நான் வழக்கு தொடுத்த பின் தான் இந்த 15 பேரும் அருகில் உள்ள அறைக்கு கொண்டு வரப்பட்டனர்.கடந்த 12 முதல் 15 ஆம் திகதி வரை நான் மட்டுமே ஓ.எப்.வார்டில் இருந்தேன்.என்னை சிறையில் அடைக்கும் போது 15 பேர் அந்த வார்ட்டில் இருந்தனர் எனக் கூறுவதை மறுக்கிறேன். சிறையில் உள்ள முதல் வகுப்பு கைதிகள் போல் என்னை சிறைக்குள் நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கவில்லை.நான் தனிமைச்சிறையில் உள்ளேன்.பாரபட்சமாகவும் நடத்தப்படுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வரும் 2 ஆம் திகதிக்கு நீதிபதிகள் நாகப்பன் சிவகுமார் அடங்கிய நீதிபதிகள் குழு தள்ளி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’