யாழ். குடாநாட்டில் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பாக பிரதேசமட்ட ரீதியில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.
இன்று தொடக்கம் இவர்களது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவர்களது இச் செயற்பாட்டுக்கு மனித உரிமைகள் இல்லம் வாகன உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பதிவுகள் தொடர்பாகக் கிராம ரீதியில் போதிய விளக்கம் இன்மையால் அவர்கள் இதில் பெரும் நாட்டம் காட்டவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இச்செயற்பாடில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்யாதவிடத்து பாரிய விளைவுகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பான விளக்கம் இன்மையே மக்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யாமைக்குக் காரணம்.
மக்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யாது விட்டால் பல்கலைக்கழகத் தெரிவு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு நிதியொதுக்கீடு தொழில் வாய்ப்புப் பெறுதல் அரச உத்தியோகத்தர் நியமனம் போன்ற பல்வேறு சிக்கல் எதிர் நோக்கவேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’