இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம் இன்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்துப் பேசினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வர்த்தக மற்றும் கலாசார ஒப்பந்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.இங்கிலாந்தின் இளம் பிரதமரான 43 வயது கேமரூனுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வர்த்தக ஒப்பந்தங்கள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வர்த்தக மற்றும் கலாசார ஒப்பந்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
57 ஜெட் விமானங்களை வாங்குகிறது இந்தியா...
முன்னதாக, இங்கிலாந்துடனான பாதுகாப்புத் துறை உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம் நிறுவனத்திடம் இருந்து ரூ.9500 கோடி செலவில் மேலும் 57 நவீன ஹாக் பயிற்சி ஜெட் விமானங்களை வாங்க இந்தியா புதன்கிழமை ஒப்பந்தம் செய்துகொண்டது.
ஹாக் விமானங்களை வாங்க பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்.) புதன்கிழமை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என்று டேவிட் கேமரூன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’