திருமணம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்வதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, மோசடிசெய்யும் நபர்கள் குறித்து பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் பெண்களிடம் அவர்களை திருமணம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதியளித்து, வெளிநாடு செல்வதற்கான விசா மற்றும் ஏற்பாடுகளுக்காக 6 லட்சம் வரை பணம் தேவைப்படுவதாககூறி பணம் பெற்றுக்கொள்வது தெரியவந்திருப்பதாக பொலிஸ் திணைக்களத்தின் மோசடிப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணான அரச ஊழியர் ஒருவர் மோசடிப் புலனாய்வுப் பிரிவிடம் புகாரிட்டுள்ளதாக அப்பணியம் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளது.
பத்திரிகையில் மணப்பெண் தேடி விளம்பரம் செய்தபின்னர் பெண்ணொருவரிடமிருந்து பெருந்தொகை பணத்தைப் பெற முயன்ற நபர் ஒருவரை தாம் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே போன்ற குற்றச்சாட்டுக்குள்ளான திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரையும் தாம் கைது செய்திருப்பாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’