வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஜூலை, 2010

ஜீ.எல். பீரிஸ் - நீல் புஹ்னே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.


ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க் சென்றிருந்த நீல் புஹ்னே, இன்று காலை நாடு திரும்பிய நிலையில், பான் கீ மூனின் ஆலோசனைக்கமைய புஹ்னே, இந்த சந்திப்பில் ஈடுபட்டதாகவும் மேற்படி தகவல்கள் கூறின.
இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது ஐ.நா செயலாளர் நாயகத்தின் செய்தியொன்றை நீல் புஹ்னே, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கை தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகத்தினால் நிறுவப்பட்ட நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து நியூயோர்க்கிற்கு அழைக்கப்பட்டிருந்த வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னே இன்று நாடு திரும்பினார்.
இதேவேளை, ஐ.நா.வினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, முதல் தடவையாக நேற்று கூடியது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குழு ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தினரையும் சந்தித்ததாகவும் குறித்த செய்திச் சேவை மேலும் தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’