மருதமடு நாயகியின் ஜூலை மாதத் திருவிழா நாளை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
நாளை காலை 6.30 மணிக்குத் திருவிழா கூட்டுத் திருப்பலியை, மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில், அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோபர்ட் அன்ராடி ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு வியானி பர்னாண்டோ, திருமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத் துணை ஆயர் பேரருட்திரு பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆகியோர் இணைந்து ஒப்புக் கொடுப்பார்கள்.
திருப்பலியைத் தொடர்ந்து திருசுரூப பவனி இடம்பெற்று, மருத மடு அன்னையின் ஆசீர் வழங்கப்படும்.
திருவிழாவில் கலந்து கொள்ளும் அடியார்கள் நலன்கருதி, மன்னாரிலிருந்து விசேட அரச-தனியார் பஸ் சேவைகள் இன்றிலிருந்து நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்தும் விசேட பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை மடு அன்னையின் திருவிழாவில் பங்கெடுப்பதற்கென தென்னிலங்கையிலிருந்து மட்டும் 2 லட்சம் பேர் வரை ஆலயத்தில் தங்கியிருப்பதாக எமது மன்னார் மாவட்ட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’