வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 ஜூலை, 2010

அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள கூட்டமைப்பினர் 5, 6, 7 ஆகிய திகதிகளில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் உட்பட்ட உயர் நிலை அதிகாரிகள் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சி உட்பட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இவ் விஜயம் தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ. தகவல் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவே முக்கியமாகப் பேச்சுக்கள் இடம்பெறும். அத்துடன் தற்போதைய நிலைமை, வன்னி மக்களின் மீளக் குடியமர்வு ஆகியன தொடர்பாகவும் பேச விருக்கின்றோம்.
வன்னி மக்களுக்காக 50ஆயிரம் வீடுகள் அமைக்கவும் 500 ட்ராக்டர்கள் வழங்கவும் விவசாய உபகரணங்கள் வழங்கவும் சிறு கைத்தொழில் முயற்சிக்கு உதவவும் இந்தியா முன்வந்து அவை தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளது. அவற்றை விரைவுபடுத்துவது குறித்துப் பேச்சுக்கள் நடத்துவோம்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட வில்லை. எனினும் அவருக்கு நேரம் இருக்குமாயின் அவரைச் சந்திப்போம். எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று சுரேஷ் கூறினார்.
இந்தியா செல்லவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநான், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சுமந்திரன் ஆகியோர் இடம்பெறுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’