வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 ஜூலை, 2010

வரவு செலவுத்திட்ட இரண்டாவது குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை!

இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் என்னைத் தெரிவுசெய்த பிரதேச மக்களின் சார்பாகக் கலந்துகொண்டு அந்த மக்களின் தேவைகளையும் வேண்டுகைகளையும் இந்த மன்றத்தில் சமர்ப்பிப்பதற்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்துக்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன். (உரை முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது)

இந்த வரவு செலவுத்திட்டமானது யுத்தம் முடிந்த பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் சூழலில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இதை அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டமாகக் குறிப்பிடலாம்.
அதேவேளை இந்த வரவு செலவுத்திட்டமானது போர் முடிந்த பிறகு அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் அந்தப் பிரதேசங்களினதும் மறுவாழ்வையும் மீளமைப்பையும் செய்வதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டு அமைய வேண்டுமெனக் கருதுகிறேன். இடப்பெயர்வின் துயரத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வின் கடினங்களையும் சுமந்தபடி மீள்குடியேறிய கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களினுடைய குரல்களைப் பதிவுசெய்யுமாறு காலம் எனக்குப்பணித்துள்ளது.
அதேவேளை முழுநாட்டினுடைய நலனுக்கு அவசியமான விடயங்கள் குறித்தும் என்னுடைய கவனத்தைப் பதிவுசெய்கிறேன். எனவே இவற்றின் அடிப்படையிலேயே இந்த மன்றில் என்னுடைய உரையைச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’