இந்நிகழ்வில் கலந்து கொண்டு யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல் கருத்துத் தெரிவிக்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இப்பிரதேச மக்கள் எனவே மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவுதல் அவசியமாகிறது.
எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இரண்டு வருடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் அத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையானது நன்மையளிப்பதாகவும் ஆளுநர் அவர்களுக்கு யாழ் மாவட்ட பிரதேசமானது பரீட்சயமானதாகும். ஏனெனில் இவர் வட மாகாண ஆளுநராக பதவியேற்பதற்கு முன் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தமையால் இப்பிரதே மக்களின் கஸ்டங்கள் மற்றும் அவர்கள் முகம் கொடுத்து வரும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் அவருக்கு நன்கு தெரிந்தமையினால் எமது பிரதேச மக்களின் வாழ்வாதார உதவிகளுக்கும் அவர் அரும்பாடுபட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது எனவும் கமல் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் வடமாகாண ஆளுநரின் பிரதி பிரதம செயலாளர் இராசநாயகம் உட்டப் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’