வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

வெளிவிவகார அமைச்சரை நீல் புஹ்னே சந்திக்கத் திட்டம்

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்தித்துப் பேசவுள்ளார்.



ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க்கிற்குச் சென்ற நீல் பூனே இன்றிரவு இலங்கைக்குத் திரும்புகிறார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை நீல் புஹ்னே நாளை சந்தித்துப்பேச வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செய்தியொன்றை அவர் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையிலுள்ள ஐ.நா. அமைப்பினர் சிறந்தமுறையில் பேணப்படுவது மற்றும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் கடப்பாடுகளை நிறைவேற்றுவது ஆகியன குறித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வலுவான எதிர்பார்ப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவை ஐ.நா. செயலாளர் நாயகம் நியூயோர்க்கிற்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் ஐ.நா. ஊழியர்கள் இடையூறின்றி பணியாற்றுவதற்கு ஏற்ப மாறிவரும் சூழ்நிலையால் ஐ.நா. வதிவிடப்பிரதிநி இலங்கைக்குத் திரும்பிவருவதாக ஐ.நா. பேச்சாளர் ஒருவர் கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’