வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

தர்ஷிகாவின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மனு

யாழ். வேலணை வைத்தியசாலை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் சடலத்தினை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவொன்றைக் கையளித்தார்.

இதேவேளை, வழக்கு விசாரணைக்கு எவரும் செல்லக் கூடாது என சிலர் அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளான தர்ஷிகா, தற்கொலை செய்யவில்லை என்றும் அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என்றும் அவரது தாயார் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். தர்ஷிகாவின் மரணம் குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் ஆர்.வசந்தசேனன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வேலணை வைத்தியசாலையின் பொறுப்பாளரான வைத்தியர் பிரியந்த செனவிரத்னவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில், மன்றுக்கு சமூகமளித்த தர்ஷிகாவின் தாயார், தனது மகளின் மரணம் குறித்த வழக்கு விசாரணைக்கு எவரும் செல்லக் கூடாது என்று இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திச் சென்றதாக கூறினார்.
குறித்த மனுவினை கருத்திற்கொண்ட நீதிவான், தர்ஷிகாவின் தாயாரது கோரிக்கை தொடர்பான தீர்ப்பினை நாளை செவ்வாய்க்கிழமை வழங்குவதாக கூறி வழக்கினை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’